ADD THE SLIDER CODE HERE

Pages

Saturday, August 20, 2011

Rise Of The Planet Of The Apes - விமர்சனம்

இரண்டாம் பாதியில் வருகிறது அந்த காட்சி. திரையரங்கின் பாதி ஜனம் வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்க மீதி ஜனம் விசில் சத்தத்தில் காதை கிழிக்கிறது. ஆரவாரத்தை கூட அடக்கி வெளிபடுத்தும் சத்யம் தியேட்டரில் இவ்வளவு சத்தமா என்று தோன்றியது. படம் பார்த்தவர்களுக்கு நான் எந்த காட்சியை பற்று பேசுகிறேன் என்று தெரிந்திருக்கும்.

மிக பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ்ல் சக்கை போடு போட்டுகொண்டிருகிறது. Transformers Dark of the Moon படம் போட்ட சூட்டிற்கு நல்ல மருந்து இது. படத்தின் கதை, நடிகர்கள், இயக்குனரை பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்பு Motion Capture தொழில்நுட்பத்தை பற்றி தான் முதலில் கூறவேண்டும். அவதார் படத்திற்கு பின்பு இந்த டெக்னாலஜியை மிக அழகாக பயன்படுத்தி இருகிறார்கள். சீஸர் என்கிற குரங்கு தன் உணர்சிகளை வெளிபடுத்தும் காட்சிகள் எல்லாமே படத்தின் மகா மெகா பிளஸ். Genetic Engineering மருத்துவ ஆராய்ச்சி மூலம் அதீத மூளை வளர்ச்சி பெரும் சீஸர் என்ற குரங்கு தான் படத்தின் நாயகன். ஒரு மாஸ் ஹீரோவை போல் தன் இனத்திற்காக பாடுபடுவது, தன்னை அடித்த குரங்கை அடிமை ஆக்குவது, மனிதர்களுக்கு எதிராக படை திரட்டி வழிநடத்துவது, சுய சாம்ராஜ்யம் உருவாக்கி தலைவன் ஆவது என்று தோன்றும் அத்தனை காட்சிகளிலும் நம்மை இம்ப்ரெஸ் செய்கிறது.


ஆன்டி செர்கிஸ் என்பவர் தான் அந்த சீஸர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது அசைவுகளை தான் படமாக்கி குரங்காக திரையில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆன்டி செர்கிஸ் இல்லாமல் இந்த படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் Gollum மாகவும் கிங் காங் படத்தில் வந்த கொரில்லா போலவும் நடித்தவர்தான் இவர். இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தும் ஆஸ்கார் கமிட்டி Motion Capture நடிகர்களை சிறந்த நடிகர்கள் விருதுக்கு பரிந்துரைபதில்லை என்று ஆதங்க படுகிறார். டாம் க்ரூஸ் இதை பற்றி தன் வலைத்தளத்தில் எழுதி இருப்பதை இங்கு படிக்கவும்.

படத்திற்கு Visual effects செய்தது WETA. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், கிங் காங், அவதார் என்று ஹாலிவுட்ன் முக்கிய பாத்திரங்களை வடிவமைத்தவர்கள். அவதார் படத்தில் ஜேம்ஸ் கேமரூன் அறிமுகபடுத்திய Image Based Performance Capture என்ற தொழில்நுட்பம் தான் படத்திற்கு மிகவும் உதவியது என்று WETA இயக்குனர் Joe Letteri தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நடிகர் நடிக்கும் போது கண்கள், உதடுகள் அருகில் ஏற்படும் சுருக்கங்களை கூட தெளிவாக பதிவு செய்ய முடியும். இந்த Joe Letteri நான்கு முறை Visual effects காக ஆஸ்கார் விருது பெற்றவர்.

உலகத்தரம் என்று சினிமா விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்கள் மேல்தட்டு ரசிகர்களை தவிர வேறு யாருக்கும் பிடிப்பதில்லை. என்னை கேட்டால் எல்லா தரப்பு ரசிகர்களிடமும் ஒரே போன்ற வரவேற்ப்பை பெரும் இது போன்ற படங்கள் தான் உலகத்தரம்.

The Making Of Rise Of The Apes

8 comments:

 1. எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்.. அது என்ன எல்லா பதிவிலும் முதல் கமெண்ட்டாக vada னு போடுறிங்க.. இது கூட தெரியாம ப்ளாக் எழுத வந்துட்டான் பாருன்னு திட்டாம பதில் சொல்லுங்க..

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம் கார்த்தி, கதையோட பிளஸ் மைனஸ் கொஞ்சம் சேர்க்கலாமே !

  ReplyDelete
 3. Kungu Fu Panda 2 க்கு அப்புறம் நான் ரொம்பவும் என்ஜாய் பண்ணி பார்த்த படம்.. எனக்கும் எந்த மைனஸ்சும் தெரியல..

  ReplyDelete
 4. பிளஸ் - நம்ம அண்ணாத்த சீஸர் தான்.. படம் பாத்த கையோட அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சேன்.. (நம்ம ஊர்ல கொரங்கு சேட்டை பண்ற சில ஹீரோஸ்க்கு ரசிகர் மன்றம் இருக்கும் பொது கொரங்குக்கு இருக்க கூடாதா?) :)

  ReplyDelete
 5. இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை..
  பார்க்கலாமா வேணாமானு யோசிச்சே தவறவிட்டுட்டேன்.
  நல்ல விமர்சனம்..நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. //எல்லா தரப்பு ரசிகர்களிடமும் ஒரே போன்ற வரவேற்ப்பை பெரும் இது போன்ற படங்கள் தான் உலகத்தரம். ///
  கண்டிப்பா பாஸ், மக்கள்க்கு புடிக்கிற மாதிரி இருக்குற படம் தான் உலகதரம்.....இந்த படம் கண்டிப்பாக உலகத்தரத்தில் வந்து உள்ளது....நான் படத்தை ரொம்ப ரசிச்சு பார்த்தேன்....

  ReplyDelete
 7. @ராஜ் நன்றி தல..

  ReplyDelete