ADD THE SLIDER CODE HERE

Pages

Friday, September 2, 2011

Pirates Of The Silicon Valley - ஜாப்ஸ் - கேட்ஸ்

சென்ற வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகபோவதாக அறிவித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஸ்டீவ் இல்லாத ஆப்பிள் எப்படி இருக்கும் என்று சிந்தனை ஒருபுறம் இருந்தாலும் அவரது உடல்நிலை பற்றிய கவலை தான் அவரது விசிறிகள் பலருக்கும் இருக்கிறது என்னையும் சேர்த்து. Pancreatic Cancer ரால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் சோர்ந்து வருவது நம் எல்லாருக்கும் தெரிந்ததே. நான் ஸ்டீவ் ஜாப்ஸ் சை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டது Pirates of Silicon Valley என்ற படத்தின் மூலமாக. கல்லூரி நாட்களில் பார்த்த இந்த படம் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ்சின் வளர்ச்சியை பற்றிய தொகுப்பு. அதாவது கணிப்பொறிகளின் வளர்ச்சி. இரண்டும் ஒன்று தானே. கணினி வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளோடு இந்த இரு ஜாம்பவான்களை பற்றியும் அறிந்து கொள்ள சரியான படம்.


ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ்ன் குணங்களை விவரிப்பதிலிரிந்து படம் துவங்குகிறது. Destiny, Karma, Past life இதில் எல்லாம் நம்பிக்கை கொண்டவர் ஜாப்ஸ். புதுமை விரும்பி. மிகவும் கோபக்காரர். கேட்ஸ் இதற்கு நேர் எதிர். எதற்குமே அலட்டிக் கொள்ள மாட்டார். சிறுபிள்ளைதனமாக நடப்பவர். எப்போதும் கூல் டைப். ஆனால் இருவரின் வாழ்க்கை தத்துவமும் ஒன்று. "Good Artists Create. Great Artists Steal". படத்தின் பெயருக்கான காரணம் இப்போது புரியும்.

எழுபதுகளின் துவக்கத்தில் ஜாப்ஸ் Personal Computer உருவாக்கும் வேலைகளில் இருந்த போது கேட்ஸ் MITS நிறுவனத்தின் Altair 8800 என்கிற மைக்ரோ கம்ப்யூட்டர்க்கு BASIC மொழியை பயன்படுத்தி மென்பொருள் எழுத்து கொண்டிருக்கிறார். 1976 ல் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கும் ஜாப்ஸ் அவர்களது முதல் Personal Computer ரான Apple I ரிலீஸ் செய்கிறார்கள். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு செல்கிறார் ஜாப்ஸ். இந்த காலகட்டத்தில் கேட்ஸ்சின் Microsoft உதயமாகிறது. DOS Operating system மூலம் மில்லினியர் ஆகிறார் கேட்ஸ்.

இந்த நேரத்தில் தான் கணினி உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த போகும் Graphical User Interface(GUI) எனப்படும் இடைமுகத்தை Mouse சகிதம் கண்டுபிடிக்கிறது Xerox நிறுவனத்தின் ஒரு பகுதி. ஆனால் காலத்தை மீறி சிந்திக்கும் திறன் இல்லாத Xerox நிறுவன அதிகாரிகள் அதை பயனற்றது என்று மறுத்து விடுகிறார்கள்(அப்படி கூறியதற்காக அவர்கள் இன்றும் வருந்தி கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை). இதை தெரிந்து கொண்ட ஜாப்ஸ் GUI கான்செப்ட்டை Xerox யிடம் இருந்து லாவகமாக திருடி Macintosh ரிலீஸ் செய்கிறார். Macintosh சிற்கு மென்பொருள் எழுதி தருவதாக கூறும் கேட்ஸ் அதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் சேர்ந்து பணி புரிகிறார். அதே GUI கான்செப்ட்டை ஜாப்ஸ்யிடம் இருந்து அடித்து Windows ரிலீஸ் செய்து உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக மாறுகிறார் பில் கேட்ஸ். தான் துவங்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளிஎற்றபடுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ஜாப்ஸ் ஆப்பிள்லில் இணைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

படத்தில் அட்டகாசமான இரண்டு காட்சிகள் உண்டு.

1) IBM அதிகாரிகளை சந்திக்க செல்கிறார் பில் கேட்ஸ். உடன் Paul Allen மற்றும் Steve Ballmer. இந்த காட்சியில் ஒரு குட்டி சஸ்பென்ஸ் இருக்கிறது. படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சாதாரண இளைஞன் பின்னாளில் 'Sultan Of The Software' என்று அழைக்கபட்டதிற்கு முதல் படி இந்த சந்திப்பு.

2) கம்ப்யூட்டர்க்கு Mouse எவ்வளவு முக்கியம் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் முதன் முதலில் அதை கண்டுபிடித்து கொண்டுவரும் ஊழியர்களை பார்த்து Xerox உயர் அதிகாரிகள் சிரிக்கும் காட்சி.

உலகை மாற்றிய ஆப்பிள் வெளியீடுகள்:

Anatomy of Apple Design from Transparent House on Vimeo.


இந்த படம் பார்க்கும் போது பில் கேட்ஸ்சை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் செய்த சாமர்த்தியமான திருட்டுகள் என்னை கவர்ந்தன. கேட்ஸ்க்கு போட்டி என்பதால் ஸ்டீவ் ஜாப்ஸ் ஏனோ ஒரு எதிரி போல எனக்கு தோன்றினார். ஆனால் ஒரு நாள் அவர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய பதினைந்து நிமிட உரை அவரை பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை உடைத்தது. தன் வாழ்வில் நடந்த மூன்று சம்பவங்களை வைத்து அவர் ஆற்றிய சொற்பொழிவு நூறு சுய முன்னேற்ற நூல்களுக்கு ஒப்பாகும். அன்று முதல் எனக்கு மிக பெரும் Inspiration னாக ஸ்டீவ் ஜாப்ஸ் மாறினார். அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளேன். பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவும்.



ஆப்பிள் தயாரிப்புகள் மட்டும் அல்ல. அதை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரங்களும் கூட தனித்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஜாப்ஸ். அதனால் தான் Macintosh ன் முதல் விளம்பரம் இன்று வரை உலக புகழ் பெற்றதாக கருதபடுகிறது. இதை இயக்கியவர் நமது Ridley Scott. ஆம் நீங்கள் நினைத்தது சரி. அவரே தான். IBM உலகை ஆண்டுகொண்டிருந்த நேரம். ஜாப்ஸ் IBM ன் தீவிர எதிரி. அதனால் அவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற Macintosh வருகிறது என்பது போல் இந்த விளம்பரத்தை வெளியிட்டிருப்பார். அவர்களின் மற்ற புதுமையான விளம்பரங்களை காண இங்கே சொடுக்கவும்.

Friday, August 26, 2011

Desert Flower - மறைக்கப்பட்ட வரலாறு

சில நாட்களுக்கு முன் எதேற்சியாக ஒரு பதிவை படித்தேன். ஒரு பெண்ணுக்கு நடந்த துரோகம் பற்றிய பதிவு போல் இருந்தது. ரத்தம், ப்ளேடு, பெண் உறுப்பு, முட்கள் போன்ற வார்த்தைகள். பத்து வரிகள் கூட படித்திருக்க மாட்டேன். உடம்பெல்லாம் கூசியதால் உடனே அந்த தளத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன்.


இன்று Desert Flower என்ற படத்தை பற்றி கேள்விபட்டேன். கியூபாவை பற்றிய படம் என்று ஒரு ப்ளாக்ல் போட்டிருந்ததால் உடனே டவுன்லோட் செய்து பார்த்தேன்(கியூபா மற்றும் காஸ்ட்ரோ என்றால் எனக்கு கொள்ளை இஷ்டம்). ஆனால் படத்திற்கும் கியூபாவிற்கும் சம்மந்தமே இல்லை. நிறுத்தி விடலாமா என்று நினைக்கையில் படத்தில் வந்த ஒரு காட்சி எனக்கு முதல் பத்தியில் நான் கூறிய அந்த பதிவை நினைவு படுத்தியது. பிறகு தான் தெரிந்தது நான் பார்த்து கொண்டிருப்பது பிரபல கறுப்பின மாடல் அழகி வாரிஸ் திரி எனபவரின் வாழ்க்கை வரலாறு என்று. சோமாலியா வில் பிறந்து பதிமூன்று வயதில் ஒரு கிழவனுக்கு மணமுடிக்க பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஓடி வந்து பல இன்னல்களுக்கு பின் மாடல் ஆனவர்.

சில நாட்களுக்கு முன் நான் படித்த பதிவு இந்த வாரிசை பற்றி தான். Female Genital Mutilation(FGM) என்ற ஒரு கொடூர செயல் உலகில் சர்வ சாதரணமாக அரங்கேறுவதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆப்ரிக்காவில் ஒரு பெண் சிறுமியாக இருக்கும் போது அவளின் பிறப்புறுப்பின் சதையை அறுத்து, சிறுநீர் கழிக்க மட்டும் இடம் விட்டு மற்ற இடத்தை முட்களால் நூல் கொண்டு தைக்கிறார்கள். ஏனெனில் அந்த பகுதி அசுத்தமாம். அந்த பெண் வளர்த்து திருமணமான பின்பு கணவன் பிளேடு அல்லது கத்தி கொண்டு அடைக்கப்பட்ட உறுப்பை திறந்து விடுவான் உறவு மேற்கொள்ள. இவை அனைத்தும் எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் செய்யபடுகிறது. இந்த பெண்ணுறுப்பு சிதைப்பு நடைபெறாத பெண்களுக்கு திருமணம் நடக்காது. இப்படி மூடநம்பிக்கையின் பெயரால் சித்ரவதை செய்யப்பட கோடிக்கணக்கான பெண்களில் வாரிஸ்சும் ஒருவர். 3000 ஆண்டுகளாக ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்த இரக்கமற்ற செயலை பற்றி வாரிஸ் ஒரு பேட்டியில் கூறிய பிறகுதான் உலகத்திற்கு இது தெரிய வந்தது.

இவர் 1998 ல் எழுதிய Desert Flower என்ற புத்தகம்தான் பிறகு படமாக வெளிவந்தது. படத்தில் வாரிஸ் சாக நடித்திருப்பது எதியோப்பிய மாடல் Liya Kebede. இவர் நடித்த ஒரே படம் இது தான். எனினும் படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். வாழ்க்கை வரலாறு படம் என்றாலும் போர் அடிக்காமல் செல்கிறது. Disturbing Movie என்பார்களே. எனக்கு இந்த படம் அப்படிதான் இருந்தது. FGM செய்யப்படும் காட்சி வரும்போது கண்களை மூடிக்கொண்டேன்.

1997ம் வருடம் ஐ நா சபை இவரை கொடுமைகளுக்கு எதிராக போராடும் பிரதிநிதியாக நியமித்தது. பல நாடுகளில் இந்த செயல் தடை செய்யப்பட்ட போதும் ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் இதனால் பாதிக்கபடுகின்றனர் என்று படத்தின் முடிவில் சொல்லபடுகிறது. மேலும் இது குழந்தைகளின் மூன்று அல்லது நான்கு வயதில் செய்யப்படுவதால் வலி தாங்காமல் பலர் இறந்துவிடுகின்றனர். இதில் வாரிசின் இரண்டு சகோதரிகளும் அடக்கம்.


நான் வாரிஸ்சை பற்றி படித்த அந்த பதிவு இதுதான். படத்தில் சொல்லாத பல செய்திகள் இந்த பதிவில் சொல்லப்பட்டு இருகின்றது. படம் பார்கையில் நம் எல்லோருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். இது போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்காமல் நான்கு கால் பாய்ச்சலில் உலகம் முன்னேறி என்ன பயன்?

Saturday, August 20, 2011

Rise Of The Planet Of The Apes - விமர்சனம்

இரண்டாம் பாதியில் வருகிறது அந்த காட்சி. திரையரங்கின் பாதி ஜனம் வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்க மீதி ஜனம் விசில் சத்தத்தில் காதை கிழிக்கிறது. ஆரவாரத்தை கூட அடக்கி வெளிபடுத்தும் சத்யம் தியேட்டரில் இவ்வளவு சத்தமா என்று தோன்றியது. படம் பார்த்தவர்களுக்கு நான் எந்த காட்சியை பற்று பேசுகிறேன் என்று தெரிந்திருக்கும்.

மிக பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ்ல் சக்கை போடு போட்டுகொண்டிருகிறது. Transformers Dark of the Moon படம் போட்ட சூட்டிற்கு நல்ல மருந்து இது. படத்தின் கதை, நடிகர்கள், இயக்குனரை பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்பு Motion Capture தொழில்நுட்பத்தை பற்றி தான் முதலில் கூறவேண்டும். அவதார் படத்திற்கு பின்பு இந்த டெக்னாலஜியை மிக அழகாக பயன்படுத்தி இருகிறார்கள். சீஸர் என்கிற குரங்கு தன் உணர்சிகளை வெளிபடுத்தும் காட்சிகள் எல்லாமே படத்தின் மகா மெகா பிளஸ். Genetic Engineering மருத்துவ ஆராய்ச்சி மூலம் அதீத மூளை வளர்ச்சி பெரும் சீஸர் என்ற குரங்கு தான் படத்தின் நாயகன். ஒரு மாஸ் ஹீரோவை போல் தன் இனத்திற்காக பாடுபடுவது, தன்னை அடித்த குரங்கை அடிமை ஆக்குவது, மனிதர்களுக்கு எதிராக படை திரட்டி வழிநடத்துவது, சுய சாம்ராஜ்யம் உருவாக்கி தலைவன் ஆவது என்று தோன்றும் அத்தனை காட்சிகளிலும் நம்மை இம்ப்ரெஸ் செய்கிறது.


ஆன்டி செர்கிஸ் என்பவர் தான் அந்த சீஸர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது அசைவுகளை தான் படமாக்கி குரங்காக திரையில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆன்டி செர்கிஸ் இல்லாமல் இந்த படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் Gollum மாகவும் கிங் காங் படத்தில் வந்த கொரில்லா போலவும் நடித்தவர்தான் இவர். இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தும் ஆஸ்கார் கமிட்டி Motion Capture நடிகர்களை சிறந்த நடிகர்கள் விருதுக்கு பரிந்துரைபதில்லை என்று ஆதங்க படுகிறார். டாம் க்ரூஸ் இதை பற்றி தன் வலைத்தளத்தில் எழுதி இருப்பதை இங்கு படிக்கவும்.

படத்திற்கு Visual effects செய்தது WETA. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், கிங் காங், அவதார் என்று ஹாலிவுட்ன் முக்கிய பாத்திரங்களை வடிவமைத்தவர்கள். அவதார் படத்தில் ஜேம்ஸ் கேமரூன் அறிமுகபடுத்திய Image Based Performance Capture என்ற தொழில்நுட்பம் தான் படத்திற்கு மிகவும் உதவியது என்று WETA இயக்குனர் Joe Letteri தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நடிகர் நடிக்கும் போது கண்கள், உதடுகள் அருகில் ஏற்படும் சுருக்கங்களை கூட தெளிவாக பதிவு செய்ய முடியும். இந்த Joe Letteri நான்கு முறை Visual effects காக ஆஸ்கார் விருது பெற்றவர்.

உலகத்தரம் என்று சினிமா விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்கள் மேல்தட்டு ரசிகர்களை தவிர வேறு யாருக்கும் பிடிப்பதில்லை. என்னை கேட்டால் எல்லா தரப்பு ரசிகர்களிடமும் ஒரே போன்ற வரவேற்ப்பை பெரும் இது போன்ற படங்கள் தான் உலகத்தரம்.

The Making Of Rise Of The Apes

Memento - குழப்பங்களும் - விளக்கங்களும்

Memento படத்தை பார்த்து முடித்தவுடன் சில கேள்விகள் மனதில் எழும்.

உண்மையில் John G யார்?

Sammy Jankis என்பவர் ஒரு கற்பனை கதாபாத்திரமா? Lenny தான் Sammy Jankis சா?

Teddy நிஜமாகவே போலீஸ்சா?

Lenny அறை எண் 21ஆ இல்லை 304ஆ?

இதற்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை படித்தால் கிடைக்கும்.
  • டெட்டியும் ஜிம்மியும் நண்பர்கள். போதை பொருள் விற்பவர்கள். டெட்டி தான் ஜிம்மி யை பணத்தை எடுத்து கொண்டு கொலை நடக்க போகும் இடத்திற்கு வர சொல்கிறான். 
  • அதே டெட்டி, ஜிம்மியை ஹீரோவை விட்டு கொலை செய்து விட்டு அந்த பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று நினைக்கிறான்.
  • ஜிம்மி, டெட்டி இருவருக்கும் லென்னியை முன்பே தெரியும். டெட்டி ஏற்கனவே லென்னியை பயன்படுத்தி ஒருவனை கொன்றிருக்கிறான். 
  •                   
  • டெட்டி ஒரு போலீஸ் இல்லை. ஹோட்டல் வரவேற்பாளர் ப்ருட் இருக்கும் போது லென்னி டெட்டியை "Officer Gammel" என்று அழைப்பார். உடனே டெட்டி ஒரு கணம் ப்ருட் அதை கவனித்தாரா என்று பார்ப்பார். இது ஒரு clue. அடுத்தது டெட்டி ஒரு இடத்தில் "I am a cop" என்றும் பிறகு "I am a snitch" என்றும் கூறுவார். ஆகவே டெட்டியிடம் இருக்கும் அந்த போலீஸ் அடையாள அட்டை போலியாக இருக்க வேண்டும். 
  • நடாலிக்கு லென்னியை பற்றி முன்பே தெரியும்.  அவளது காதலன் ஜிம்மி கூறி இருக்கிறான். 
  • நடாலிக்கு டெட்டியை தெரியும். அனால் பார்த்ததில்லை. ஒரு முறை பார்த்திருக்கிறாள். அவள் வேலை செய்யும் பார்ல் ஒரு போலீஸ் லென்னி யை பற்றி தன்னிடம் விசாரித்தார் என்று கூறுவாள். விசாரித்த போலீஸ் நம் டெட்டி தான். இதை நீங்கள் நம்பவில்லை என்றல் வண்டி நம்பரை வைத்து John G யின் புகைப்படத்தை கண்டு பிடித்த நடாலி அதை லென்னி யிடம் தரும் போது இந்த முகம் தனக்கு பரிட்சய பட்ட முகமாக உள்ளது என்று கூறுவாள். 
  • லென்னி தங்கி இருந்த அதே ஹோட்டல் லில் தான் ஜிம்மி யும் தங்கி இருந்தான். லென்னி இருந்தது அறை எண் ஜிம்மி இருந்தது அறை எண் ஜிம்மி யை கொன்று அவனது உடைகளை மாற்றும் போது ஜிம்மி யின் அறை சாவி லென்னி யிடம் வந்து விடும்.

மேலே உள்ள குறிப்புகளை வைத்து பார்த்தால் இப்போது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

Lenny தான் Sammy Jankis சா?
ஒரு Blog கை நான் படித்த போது அதில் Lenny, Sammy Jankis சாக இருக்க வாய்புகள் உண்டு என சில விளக்கங்கள் தரப்பட்டு இருந்தது. அதற்கு சாட்சியாக இந்த புகைப்படத்தை அதன் விமர்சனத்தை எழுதியவர் வெளியிட்டிருந்தார்.
  

இந்த காட்சி Sammy யின் இடத்தில் தன்னை வைத்து Lenny பொருத்தி பார்க்கிறார் என்று அர்த்தம். இந்த காட்சியின் பொது வரும் வசனங்களே அதற்கு சாட்சி. 
Lenny, Sammy யாக இருக்க வாய்ப்பே கிடையாது.  ஏனெனில் Lennyக்கு தலையில் அடிபடும் முன்பு வரை நடந்த எல்லா சம்பவங்களும் நன்றாக நினைவில் இருக்கும். Sammyயை அவர் தனக்கு அடிபடும் முன்பு வேலை நிமித்தமாக சந்தித்தார். Sammy மற்றும்  அவரது மனைவியை பற்றிய நினைவுகளை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் Sammy என்ற ஒரு ஆளே இல்லை என்று Teddy சொன்னபோது Lenny அதை நம்பாமல் இருப்பார். 

Natalie, Lennyக்கு  உதவியது Teddyயை கொள்ள வேண்டும் என்பதற்காகவா?
இல்லை. Natalieக்கு Teddy என ஒருவன் இருக்கிறான் என்று மட்டுமே தெரியுமே தவிர அவனை பார்த்ததில்லை. Teddyயை கொல்வதற்கு முந்தைய நாள் இரவு Natalieயிடம் தனது மனைவியின் பிரிவை நினைத்து வருந்துவான் Lenny. அப்போது Natalieயின் reactions சை கவனிக்கவும். இதனால் Natalie மனம் மாறி Lennyக்கு உதவி செய்வாள். 

Jimmy தாக்கப்பட்டவுடன்  'Sammy' என்று முனகுவானே. அவனுக்கு எப்படி Sammy பற்றி தெரியும்?
Teddy தான் சொல்லி இருக்க வேண்டும். ஏன்? Teddy தான் John G. எப்படி? அதை கீழே வரும் கேள்வியில்  பாப்போம். "What are you doing here?, Memory man" இதுதான் Lenny யை பார்த்தவுடன் Jimmy சிரிப்புடன் கூறும் வசனம். Jimmyக்கு முன்பே Lennyயை தெரிந்திருக்கிறது என்றால் நிச்சயம் Sammyயை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் சிரித்துகொண்டே Teddy எங்கே என்று விசாரிப்பான். இதிலிருந்து இவர்கள் மூவரும்(Lenny,Teddy,Jimmy) ஏற்கனவே பழகி இருகிறார்கள் என்றும் Lenny யை இவர்கள் இருவருமே தவறாக பயன்படுத்தி இருகிறார்கள் என்றும் தெரிகிறது. 

உண்மையான John G யார்?
 இப்படத்தில் மூன்று பேர் மட்டுமே John G யாக இருக்க முடியும். 1.Teddy, 2.Jimmy, 3.ஒரு வருடத்திற்கு முன்னால் கொல்லப்பட்ட நபர். ஏனென்றால் Teddy கொன்ற பின் யாரையும் Lenny கொல்ல போவது இல்லை. "He is the one. Kill Him" என எழுதி விட்டு தான் Teddy யை கொல்கிறான். 

முன்பு கொல்லப்பட்ட அந்த நபர் John G யாக  இருக்க முடியாது. ஏனென்றால் அவனை கண்டுபிடித்து கொடுத்தது Teddy. உண்மையான John G யை கண்டுபிடித்து கொடுக்கும் அளவிற்கு Teddy நல்லவன் இல்லை. இறந்த நபரின் பெயர் John G தான் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. 

அடுத்தது Jimmy. Jimmy யின் பணத்தை எடுத்துக்கொள்ள Teddy போடும் திட்டம் நமக்கு தெரிந்ததே. 

"So you can be my John G" படத்தில் கடைசி காட்சியில் வரும் வசனம். இது Teddy  சொன்ன பொய்களை எல்லாம் கேட்ட பிறகு Lenny கூறும் வசனம். தான் பார்த்த இன்சூரன்ஸ் கம்பெனி வேலை பொய் சொல்பவர்களை எளிதில் கண்டுபிடிக்க உதவியதாக ஒரு காட்சியில் Lenny கூறுவான். அதனால் Teddy கூறியது பொய் தான் என்று உறுதி படுத்திய பிறகு தான் "Don't Believe his Lies" என்று புகைபடத்தில் எழுதுவான். 

Memento - திரைக்கதை நேர்த்தியின் உச்சம்

இங்கு Memento படத்தின் விமர்சனத்தை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று. திரைப்பட விமர்சனங்களை கொண்ட ஒரு ப்ளாக் இந்த படத்தின் விமர்சனத்தை நிச்சயம் கொண்டிருக்க வேண்டும் என்பது என்னை பொறுத்த வரை எழுத படாத விதி. இரண்டு. இணையத்தில் பல ப்ளாக் குகள் இந்த படத்தின் கதையை தவறாக வெளியிட்டு கொண்டிருக்கின்றனமேலும் Memento வின் விமர்சனத்தை எழுதுவது ஒரு சவாலான காரியம். படத்தை பார்த்த கையோடு அதை எழுதி விட முடியாது. பல முறை பார்க்க வேண்டும். நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும். நீண்ட நேரம் சிந்தித்து தான் எழுத முடியும். ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும்.

ஞாபகங்கள். ஒரு மனிதனுக்கு தான் யார் என்று உணர்த்துவது அவனது ஞாபகங்கள் மட்டுமே. நினைவுகள் இன்றி நாம் வாழ முடியாது. அத்தகைய நினைவுகளிடம் ஒரு பிரச்னை. அவைகள் நம்பகத்தன்மை இல்லாதது. எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியது. இப்படிப்பட்ட நினைவுகளை வைத்து தனது திரைக்கதை திறமையால் கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குனர் நமது மூளையோடு ஆடும் ஆட்டமே மெமெண்டோ.



தன் மனைவியை கற்பழித்து கொன்றவனை தேடி கண்டுபிடித்து கொல்ல துடிக்கும் நாயகன். ஆனால் அவனுக்கு Short Term Memory Loss என்ற வியாதி. தன் மனைவி இறந்த பிறகு நடக்கும் எதுவும் அவன் நினைவில் இருக்காது(கஜினி படத்தின் கரு இதிலிருந்து சுடப்பட்டது தான்). இந்த படத்தில் கதை சொன்ன விதம் சினிமா உலகிற்கு புதிது. இதுவரை யாரும் முயலாத ஒன்று. படத்தில் மொத்தம் 44 காட்சிகள்.

படத்தின் முதல் காட்சியாக காண்பிக்கபடுவது கதையின் கிளைமாக்ஸ். அதாவது 44வது காட்சி. அதற்கு அடுத்த காட்சியாக காண்பிக்கபடுவது கதையின் முதல் காட்சி. புரியவில்லையா? கதை நடக்கும் வரிசை 1,2,3...44 என்று வைத்து கொள்ளுங்கள். படத்தில் இயக்குனர் அதை இந்த வரிசையில் காட்டி இருப்பார். 44,1,43,2....அதாவது கதையின் ஒரு பகுதி முன்னோக்கியும் இன்னொரு பகுதி பின்னோக்கியும் செல்லும்.இதுவரை நாம் பார்த்திராத விதத்தில் கதை நகர்வதால் நிச்சம் இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.

சரி இப்படி ஒரு கதையை நோலன் எப்படி பிடித்தார்?. தம்பி உடையான் படைக்கு அஞ்ச தேவையில்லை என்று சொல்வோமே. நோலனை பொறுத்த வரை படம் எடுக்கவும் அஞ்ச தேவையில்லை. இந்த படத்தின் கதை அவர் தம்பி எழுதியது. தனது உளவியல் வகுப்பில் கிடைத்த ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து அவரது தம்பி இந்த கதையை எழுதினார். அது நூலாகவும் வெளி வந்தது. அதில் சில மாற்றங்களை செய்து தன் திரைக்கதை யுக்தியால் ஒரு அசாத்தியமான வடிவமைப்பிற்கு அதை கொண்டுவந்தார் நோலன்.

கதை ரெடி. தயாரிப்பாளர் வேண்டுமே. அதுவும் அவரது இன்னொரு சொந்தத்தால் நிகழ்ந்தது. வேறு யாரும் அல்ல. அவரின் காதலி எம்மா தாமஸ். அவர் தனது காதலன் எழுதிய திரைகதையை நியூ மார்க்கெட் பிலிம்ஸ் சின் நிர்வாகியிடம் காட்ட அவர் "இது போன்ற ஒரு திரைக்கதையை எனது வாழ்நாளில் நான் படித்ததில்லை" என்று சிலாகித்து போனார். நோலன் முதலில் நாயகன் பாத்திரத்திற்கு Brad Pitt டை அணுகினார். அவருக்கு கதை பிடித்திருந்தும் கால்சீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. Brad Pitt நடித்திருந்தால் படத்தின் வெற்றி இரண்டு மடங்கு ஆகியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பிறகு Guy Pearse சை வைத்து இயக்கினார் நோலன். படம் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு அப்ளாஸ் அள்ளியது.

படத்தின் வெற்றியே ஒவ்வொருவரும் படத்தை புரிந்து கொண்ட விதம். இப்படத்தை பார்த்த யாராவது மூன்று பேரை அழைத்து கதை கேட்டீர்கள் என்றால் மூன்று விதமான புரிதல் உங்களுக்கு கிடைக்கும். இப்படத்தை பார்த்த பின் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தெரிய எனது இந்த பதிவை படிக்கவும்.

Tuesday, August 16, 2011

தழுவலா? தாக்கமா?

தமிழ் இணையதள பயநீட்டார்களிடையே சமீப காலமாக ஆரோக்யமான விவாதங்கள் எழுவதை காண முடிகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆங்கில திரைபடங்களிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் படங்கள் பற்றிய வாக்குவாதங்கள். கடந்த சில வருடங்களாக தமிழில் வெளியாகி நன்றாக ஓடிய படங்கள் ஹாலிவுட் படங்களின் கதைகளை கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

சமீபத்தில் வெளியான தெய்வ திருமகள் படம் மிக பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், சிலரிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இயக்குனர் விஜய் இயக்கி விக்ரம் நடித்த இந்த படம் ஆங்கில திரைப்படமான "I am Sam" ன் தழுவல் என்பதே காரணம். இதே போல் மிஷ்கின் இயக்கி நடித்த நந்தலாலா ஜப்பானிய திரைப்படமான கிஜிகிரோ படத்தின் தழுவல். ஆனால் இந்த படங்களின் இயக்குனர்களான விஜய் மற்றும் மிஷ்கின் இவை தழுவல் அல்ல. தாக்கம் என்கின்றனர். தாங்கள் ரசித்த, தங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை தமிழில் வெளியிடுவதில் என்ன தவறு என்பது இவர்கள் வாதம்.

விமர்சகர்கள் முன்வைக்கும் வாதமோ இதற்கு நேர்மார். "எந்த ஒரு படைப்பும் அதற்கு உரிய மரியாதையை பெற வேண்டும். யாரோ ஒருவர் எழுதிய கதையை சில மாற்றங்களை செய்து தன கதை என்று கூறி வெளியிடும் போக்கு கண்டிக்கதக்கது. இதன் மூலம் அவர்கள் அடையும் புகழ் போலித்தனம்" என்கின்றனர். மேலும் "காப்புரிமை பெறாமல் படம் எடுப்பது சட்டப்படி குற்றம். தெலுங்கில், ஹிந்தியில் வெளியான படங்களின் உரிமையை பெற்று அதை ரீ மேக் ஆகும் இயக்குனர்கள் ஆங்கில படத்தை ரீமேக் செய்யும் போது இதை கடைபிடிப்பது இல்லை. அவர்களுக்கு என்ன தெரியவா போகிறது என்ற எண்ணமே காரணம்" எனவும் வாதிக்கின்றனர்..

அப்படி எந்தெந்த படங்கள் வேற்று மொழி படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது என்று கேட்டால் அவர்கள் தரும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. யோகி, வாமணன், ஜூலி கணபதி, ஜக்குபாய், அந்நியன், கமல் ஹாசனின் ஒரு டஜன் படங்கள்,கஜினி, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, விருதகிரி, சரோஜா, அயன் etc etc...

சரி இந்த சமாச்சாரத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். 1.கதையை சற்று மாற்றி வெளியிடுவது(தெய்வ திருமகள், நந்தலாலா). 2.கதையின் கருவை மட்டும் எடுத்து கொண்டு தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றுவது(கஜினி, விண்ணைத்தாண்டி வருவாயா). 3.ஒரு சில காட்சிகளை மட்டும் எடுத்து கதையில் சேர்ப்பது(வேட்டைக்காரன், குருவி). பச்சை கிளி முத்துச்சரம் படம் Derailed என்ற படத்தின் முழு காப்பி என்று சிலர் கூறினாலும் அது Derailed என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்று கெளதம் படத்தின் End title ல் கூறி இருப்பார். மேலும் வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படம் ரூட்ஸ் நாவலின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது. இந்த காப்புரிமை பிரச்சனையை சேரன் மற்றும் மிஷ்கின் ஒரு பேட்டியில் தீவிரமாக எதிர்த்தார்கள். அப்போது மிஷ்கின் கூறியது "நந்தலாலா ஜப்பானிய திரைபடத்தின்(கிகுஜிரோ) தாக்கம் என்று கூறுவதில் நன் வெட்கப்படவே இல்லை. ஏனெனில் அந்த படத்தின் இயக்குனரை நான் குருவாக மதிக்கிறேன். இந்த படத்தில் கிகுஜிரோ படத்தின் பல காட்சிகளை வைத்துள்ளேன். அந்த காட்சிகளை நான் அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்" என்றார்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். இதை ஏன் படம் வெளி வருவதற்கு முன்பு யாரும் கூறுவது இல்லை. நான் மிஷ்கினின் தீவிரமான ரசிகன் என்பதால் நந்தலாலா வெளிவரும் முன் அந்த படம் தொடர்பாக அவர் கொடுத்த பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன். எதிலேயும் கிகுஜிரோ பற்றி அவர் வாய் திறந்ததே கிடையாது. அதே போல் வெற்றிமாறன் ஆடுகளம் படக்கதை பற்றி முதலில் பேசவே இல்லை . பின்னர் ஒரு பேட்டியில், அதை பற்றி பேட்டி எடுப்பவர் (Roots நாவலை பற்றி அறிந்தவர்) கேட்ட பொது அது அந்த நாவலின் தாக்கம்தான் என்று ஒப்புக்கொண்டார். 2008 ம் ஆண்டு ஒரு உதவி இயக்குனர் தசவதாரம் கதை என்னுடையது என்று வழக்கு தொடுத்தாரே. அதற்கு சம்மந்தப்பட்ட சிறு குறிப்பு இங்கு உள்ளது. இந்த குறிப்பில் இருப்பவர் தான் அந்த துணை இயக்குனரா என்று எனக்கு தெரியாது.

காப்பி வித் அனு நிகழ்ச்சியில் சூர்யா முருகதாஸ்சை அருகில் வைத்து கொண்டு "கஜினியில் வந்த Short Term Memory Loss கான்செப்ட்டை இவர் எப்படி பிடித்தார் என்று எல்லோரம் வியக்கிறோம்" என புகழ்வார். அதை கேட்டு முருகதாஸ் தன்னடக்கத்தோடு சிரித்து கொண்டு இருப்பார் அது Memento படத்தின் கதையில் எடுக்கப்பட்டது என்று கூறாமல். இயக்குனர் விஜய் ரீமேக் செய்த கிரீடம்(From malayalam movie Kireedam), பொய் சொல்ல போறோம்(From Hindi movie Khosla Ka Ghosla) படங்கள் அதை முதலில் எடுத்த தயாரிப்பளர்களிடம் காப்புரிமை பெற்று பெறகு தமிழில் எடுக்கபட்டது. ஆனால் தெய்வ திருமகள் எடுக்கும் பொது அதை அவர் ஏன் செய்யவில்லை?.

இயக்குனர்கள் முதலில் இதை மறைத்து விட்டு பிறகு ஒப்புகொள்வது ஏன்? அவர்களை உண்மையிலேயே அந்த படங்கள் பாதித்திருந்தால் படத்தின் டைட்டிலோடு "Inspired from ... " என்று போடலாமே. Credits கொடுப்பதால் மட்டும் காப்புரிமை பெறாமல் படம் எடுப்பது சரி என்று நான் கூறவில்லை. இது போல் விமர்சனங்களிலிருந்து விடுபடவாவது அதை செய்யலாம். இவர்கள் செய்வது திருட்டு என்று என்னால் கூற முடியவில்லை. ஏனெனில் ஒரு காட்சியை இயக்க அவர்கள் எவ்வளவு தூரம் போராடுவார்கள் என்பதை நாம் அறிவோம். இப்படி கடினமாக உழைத்து ஒரு படத்தை எடுத்து விட்டு பிறகு கெட்ட பெயர் வாங்கத்தான் வேண்டுமா.

"யோவ், மனுஷனுக்கு ஆயிரம் பிரச்னை இருக்கு. இத இவ்ளோ தூரம் சீரியஸ்சா எடுதுகனுமா" என்றால் ஆம் எடுத்து கொண்டு தான் ஆகவேண்டும். சினிமா ஒரு கலை. அது படைப்பக துறை என்பதால் திறமை இருப்பவர்கள் மட்டுமே அங்கு இருக்க வேண்டும். இவர்கள் செய்யும் தவறு துணை இயக்குனர்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். சுயமாக கதை எழுதுபவர்கள் கூட ஆங்கில படத்தில் இருந்து கதை பிடிக்கலாம் என சிந்திப்பார்கள். இன்று பலர் வியந்து பாராட்டும் ஆரண்ய காண்டம் படம் கூட ஒரு ஸ்பானிஷ் படத்தின் தழுவல் என்று இந்த பதிவில் படித்தேன். இப்படி அடுத்த தலைமுறை இயக்குனர்களை பாதிக்கும் இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இணையத்தில் இந்த தழுவல் கலாச்சாரத்தை தீவிரமாக சிலர் எதிர்த்து வருகின்றனர். தீவிரமாக என்றால் தெய்வ திருமகள் தழுவல் பற்றி I am Sam தயாரிப்பாளருக்கு மின் அஞ்சல் அனுப்பும் அளவிற்கு. கருந்தேள்(www.karundhel.com) என்ற பெயரில் எழுதி வரும் திரு.ராஜேஷ் மற்றும் கணேஷ் இந்த நல்ல காரியத்தை செய்தவர்கள். இது போன்ற எதிர்ப்புகள் வலு பெற்றால் மட்டுமே சொந்த சரக்கை நம்பி தமிழ் திரையுலகம் மீண்டும் திரும்பும்.