ADD THE SLIDER CODE HERE

Pages

Friday, September 2, 2011

Pirates Of The Silicon Valley - ஜாப்ஸ் - கேட்ஸ்

சென்ற வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகபோவதாக அறிவித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஸ்டீவ் இல்லாத ஆப்பிள் எப்படி இருக்கும் என்று சிந்தனை ஒருபுறம் இருந்தாலும் அவரது உடல்நிலை பற்றிய கவலை தான் அவரது விசிறிகள் பலருக்கும் இருக்கிறது என்னையும் சேர்த்து. Pancreatic Cancer ரால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் சோர்ந்து வருவது நம் எல்லாருக்கும் தெரிந்ததே. நான் ஸ்டீவ் ஜாப்ஸ் சை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டது Pirates of Silicon Valley என்ற படத்தின் மூலமாக. கல்லூரி நாட்களில் பார்த்த இந்த படம் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ்சின் வளர்ச்சியை பற்றிய தொகுப்பு. அதாவது கணிப்பொறிகளின் வளர்ச்சி. இரண்டும் ஒன்று தானே. கணினி வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளோடு இந்த இரு ஜாம்பவான்களை பற்றியும் அறிந்து கொள்ள சரியான படம்.


ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ்ன் குணங்களை விவரிப்பதிலிரிந்து படம் துவங்குகிறது. Destiny, Karma, Past life இதில் எல்லாம் நம்பிக்கை கொண்டவர் ஜாப்ஸ். புதுமை விரும்பி. மிகவும் கோபக்காரர். கேட்ஸ் இதற்கு நேர் எதிர். எதற்குமே அலட்டிக் கொள்ள மாட்டார். சிறுபிள்ளைதனமாக நடப்பவர். எப்போதும் கூல் டைப். ஆனால் இருவரின் வாழ்க்கை தத்துவமும் ஒன்று. "Good Artists Create. Great Artists Steal". படத்தின் பெயருக்கான காரணம் இப்போது புரியும்.

எழுபதுகளின் துவக்கத்தில் ஜாப்ஸ் Personal Computer உருவாக்கும் வேலைகளில் இருந்த போது கேட்ஸ் MITS நிறுவனத்தின் Altair 8800 என்கிற மைக்ரோ கம்ப்யூட்டர்க்கு BASIC மொழியை பயன்படுத்தி மென்பொருள் எழுத்து கொண்டிருக்கிறார். 1976 ல் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கும் ஜாப்ஸ் அவர்களது முதல் Personal Computer ரான Apple I ரிலீஸ் செய்கிறார்கள். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு செல்கிறார் ஜாப்ஸ். இந்த காலகட்டத்தில் கேட்ஸ்சின் Microsoft உதயமாகிறது. DOS Operating system மூலம் மில்லினியர் ஆகிறார் கேட்ஸ்.

இந்த நேரத்தில் தான் கணினி உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த போகும் Graphical User Interface(GUI) எனப்படும் இடைமுகத்தை Mouse சகிதம் கண்டுபிடிக்கிறது Xerox நிறுவனத்தின் ஒரு பகுதி. ஆனால் காலத்தை மீறி சிந்திக்கும் திறன் இல்லாத Xerox நிறுவன அதிகாரிகள் அதை பயனற்றது என்று மறுத்து விடுகிறார்கள்(அப்படி கூறியதற்காக அவர்கள் இன்றும் வருந்தி கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை). இதை தெரிந்து கொண்ட ஜாப்ஸ் GUI கான்செப்ட்டை Xerox யிடம் இருந்து லாவகமாக திருடி Macintosh ரிலீஸ் செய்கிறார். Macintosh சிற்கு மென்பொருள் எழுதி தருவதாக கூறும் கேட்ஸ் அதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் சேர்ந்து பணி புரிகிறார். அதே GUI கான்செப்ட்டை ஜாப்ஸ்யிடம் இருந்து அடித்து Windows ரிலீஸ் செய்து உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக மாறுகிறார் பில் கேட்ஸ். தான் துவங்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளிஎற்றபடுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ஜாப்ஸ் ஆப்பிள்லில் இணைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

படத்தில் அட்டகாசமான இரண்டு காட்சிகள் உண்டு.

1) IBM அதிகாரிகளை சந்திக்க செல்கிறார் பில் கேட்ஸ். உடன் Paul Allen மற்றும் Steve Ballmer. இந்த காட்சியில் ஒரு குட்டி சஸ்பென்ஸ் இருக்கிறது. படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சாதாரண இளைஞன் பின்னாளில் 'Sultan Of The Software' என்று அழைக்கபட்டதிற்கு முதல் படி இந்த சந்திப்பு.

2) கம்ப்யூட்டர்க்கு Mouse எவ்வளவு முக்கியம் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் முதன் முதலில் அதை கண்டுபிடித்து கொண்டுவரும் ஊழியர்களை பார்த்து Xerox உயர் அதிகாரிகள் சிரிக்கும் காட்சி.

உலகை மாற்றிய ஆப்பிள் வெளியீடுகள்:

Anatomy of Apple Design from Transparent House on Vimeo.


இந்த படம் பார்க்கும் போது பில் கேட்ஸ்சை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் செய்த சாமர்த்தியமான திருட்டுகள் என்னை கவர்ந்தன. கேட்ஸ்க்கு போட்டி என்பதால் ஸ்டீவ் ஜாப்ஸ் ஏனோ ஒரு எதிரி போல எனக்கு தோன்றினார். ஆனால் ஒரு நாள் அவர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய பதினைந்து நிமிட உரை அவரை பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை உடைத்தது. தன் வாழ்வில் நடந்த மூன்று சம்பவங்களை வைத்து அவர் ஆற்றிய சொற்பொழிவு நூறு சுய முன்னேற்ற நூல்களுக்கு ஒப்பாகும். அன்று முதல் எனக்கு மிக பெரும் Inspiration னாக ஸ்டீவ் ஜாப்ஸ் மாறினார். அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளேன். பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவும்.



ஆப்பிள் தயாரிப்புகள் மட்டும் அல்ல. அதை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரங்களும் கூட தனித்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஜாப்ஸ். அதனால் தான் Macintosh ன் முதல் விளம்பரம் இன்று வரை உலக புகழ் பெற்றதாக கருதபடுகிறது. இதை இயக்கியவர் நமது Ridley Scott. ஆம் நீங்கள் நினைத்தது சரி. அவரே தான். IBM உலகை ஆண்டுகொண்டிருந்த நேரம். ஜாப்ஸ் IBM ன் தீவிர எதிரி. அதனால் அவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற Macintosh வருகிறது என்பது போல் இந்த விளம்பரத்தை வெளியிட்டிருப்பார். அவர்களின் மற்ற புதுமையான விளம்பரங்களை காண இங்கே சொடுக்கவும்.