ADD THE SLIDER CODE HERE

Pages

Friday, August 26, 2011

Desert Flower - மறைக்கப்பட்ட வரலாறு

சில நாட்களுக்கு முன் எதேற்சியாக ஒரு பதிவை படித்தேன். ஒரு பெண்ணுக்கு நடந்த துரோகம் பற்றிய பதிவு போல் இருந்தது. ரத்தம், ப்ளேடு, பெண் உறுப்பு, முட்கள் போன்ற வார்த்தைகள். பத்து வரிகள் கூட படித்திருக்க மாட்டேன். உடம்பெல்லாம் கூசியதால் உடனே அந்த தளத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன்.


இன்று Desert Flower என்ற படத்தை பற்றி கேள்விபட்டேன். கியூபாவை பற்றிய படம் என்று ஒரு ப்ளாக்ல் போட்டிருந்ததால் உடனே டவுன்லோட் செய்து பார்த்தேன்(கியூபா மற்றும் காஸ்ட்ரோ என்றால் எனக்கு கொள்ளை இஷ்டம்). ஆனால் படத்திற்கும் கியூபாவிற்கும் சம்மந்தமே இல்லை. நிறுத்தி விடலாமா என்று நினைக்கையில் படத்தில் வந்த ஒரு காட்சி எனக்கு முதல் பத்தியில் நான் கூறிய அந்த பதிவை நினைவு படுத்தியது. பிறகு தான் தெரிந்தது நான் பார்த்து கொண்டிருப்பது பிரபல கறுப்பின மாடல் அழகி வாரிஸ் திரி எனபவரின் வாழ்க்கை வரலாறு என்று. சோமாலியா வில் பிறந்து பதிமூன்று வயதில் ஒரு கிழவனுக்கு மணமுடிக்க பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஓடி வந்து பல இன்னல்களுக்கு பின் மாடல் ஆனவர்.

சில நாட்களுக்கு முன் நான் படித்த பதிவு இந்த வாரிசை பற்றி தான். Female Genital Mutilation(FGM) என்ற ஒரு கொடூர செயல் உலகில் சர்வ சாதரணமாக அரங்கேறுவதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆப்ரிக்காவில் ஒரு பெண் சிறுமியாக இருக்கும் போது அவளின் பிறப்புறுப்பின் சதையை அறுத்து, சிறுநீர் கழிக்க மட்டும் இடம் விட்டு மற்ற இடத்தை முட்களால் நூல் கொண்டு தைக்கிறார்கள். ஏனெனில் அந்த பகுதி அசுத்தமாம். அந்த பெண் வளர்த்து திருமணமான பின்பு கணவன் பிளேடு அல்லது கத்தி கொண்டு அடைக்கப்பட்ட உறுப்பை திறந்து விடுவான் உறவு மேற்கொள்ள. இவை அனைத்தும் எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் செய்யபடுகிறது. இந்த பெண்ணுறுப்பு சிதைப்பு நடைபெறாத பெண்களுக்கு திருமணம் நடக்காது. இப்படி மூடநம்பிக்கையின் பெயரால் சித்ரவதை செய்யப்பட கோடிக்கணக்கான பெண்களில் வாரிஸ்சும் ஒருவர். 3000 ஆண்டுகளாக ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்த இரக்கமற்ற செயலை பற்றி வாரிஸ் ஒரு பேட்டியில் கூறிய பிறகுதான் உலகத்திற்கு இது தெரிய வந்தது.

இவர் 1998 ல் எழுதிய Desert Flower என்ற புத்தகம்தான் பிறகு படமாக வெளிவந்தது. படத்தில் வாரிஸ் சாக நடித்திருப்பது எதியோப்பிய மாடல் Liya Kebede. இவர் நடித்த ஒரே படம் இது தான். எனினும் படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். வாழ்க்கை வரலாறு படம் என்றாலும் போர் அடிக்காமல் செல்கிறது. Disturbing Movie என்பார்களே. எனக்கு இந்த படம் அப்படிதான் இருந்தது. FGM செய்யப்படும் காட்சி வரும்போது கண்களை மூடிக்கொண்டேன்.

1997ம் வருடம் ஐ நா சபை இவரை கொடுமைகளுக்கு எதிராக போராடும் பிரதிநிதியாக நியமித்தது. பல நாடுகளில் இந்த செயல் தடை செய்யப்பட்ட போதும் ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் இதனால் பாதிக்கபடுகின்றனர் என்று படத்தின் முடிவில் சொல்லபடுகிறது. மேலும் இது குழந்தைகளின் மூன்று அல்லது நான்கு வயதில் செய்யப்படுவதால் வலி தாங்காமல் பலர் இறந்துவிடுகின்றனர். இதில் வாரிசின் இரண்டு சகோதரிகளும் அடக்கம்.


நான் வாரிஸ்சை பற்றி படித்த அந்த பதிவு இதுதான். படத்தில் சொல்லாத பல செய்திகள் இந்த பதிவில் சொல்லப்பட்டு இருகின்றது. படம் பார்கையில் நம் எல்லோருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். இது போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்காமல் நான்கு கால் பாய்ச்சலில் உலகம் முன்னேறி என்ன பயன்?

5 comments:

  1. வெரிகுட். இந்தப் படத்தைப் பத்தி இப்பதான் தெரிஞ்சிக்கினேன். இதுல சொல்லப்பட்டிருக்குற விஷயங்கள் கட்டாயம் விழிப்புணர்வை ஏற்படுத்தணும். நல்ல படம். நல்ல மெசேஜ். புத்தகத்தைப் படமாக எடுத்திருப்பது இன்னும் நல்ல விஷயம். அந்த புக்கையும் படிக்கணும்.

    ReplyDelete
  2. //இது போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்காமல் நான்கு கால் பாய்ச்சலில் உலகம் முன்னேறி என்ன பயன்?//...

    So true :'(

    ReplyDelete
  3. மிக அருமையான விமர்சனம்... இதை படித்த உடனே இதை பார்த்து விட வேண்டும் என முடிவு செய்துவிட்டேன் !!! நன்றி, இதை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு...

    ReplyDelete
  4. Thanks Karundhel, Shree and Saji...

    ReplyDelete
  5. its horrible to digest... as scorp said need to read the book and see the movie... thanks castro ...

    ReplyDelete