ADD THE SLIDER CODE HERE

Pages

Saturday, August 20, 2011

Memento - திரைக்கதை நேர்த்தியின் உச்சம்

இங்கு Memento படத்தின் விமர்சனத்தை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று. திரைப்பட விமர்சனங்களை கொண்ட ஒரு ப்ளாக் இந்த படத்தின் விமர்சனத்தை நிச்சயம் கொண்டிருக்க வேண்டும் என்பது என்னை பொறுத்த வரை எழுத படாத விதி. இரண்டு. இணையத்தில் பல ப்ளாக் குகள் இந்த படத்தின் கதையை தவறாக வெளியிட்டு கொண்டிருக்கின்றனமேலும் Memento வின் விமர்சனத்தை எழுதுவது ஒரு சவாலான காரியம். படத்தை பார்த்த கையோடு அதை எழுதி விட முடியாது. பல முறை பார்க்க வேண்டும். நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும். நீண்ட நேரம் சிந்தித்து தான் எழுத முடியும். ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும்.

ஞாபகங்கள். ஒரு மனிதனுக்கு தான் யார் என்று உணர்த்துவது அவனது ஞாபகங்கள் மட்டுமே. நினைவுகள் இன்றி நாம் வாழ முடியாது. அத்தகைய நினைவுகளிடம் ஒரு பிரச்னை. அவைகள் நம்பகத்தன்மை இல்லாதது. எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியது. இப்படிப்பட்ட நினைவுகளை வைத்து தனது திரைக்கதை திறமையால் கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குனர் நமது மூளையோடு ஆடும் ஆட்டமே மெமெண்டோ.



தன் மனைவியை கற்பழித்து கொன்றவனை தேடி கண்டுபிடித்து கொல்ல துடிக்கும் நாயகன். ஆனால் அவனுக்கு Short Term Memory Loss என்ற வியாதி. தன் மனைவி இறந்த பிறகு நடக்கும் எதுவும் அவன் நினைவில் இருக்காது(கஜினி படத்தின் கரு இதிலிருந்து சுடப்பட்டது தான்). இந்த படத்தில் கதை சொன்ன விதம் சினிமா உலகிற்கு புதிது. இதுவரை யாரும் முயலாத ஒன்று. படத்தில் மொத்தம் 44 காட்சிகள்.

படத்தின் முதல் காட்சியாக காண்பிக்கபடுவது கதையின் கிளைமாக்ஸ். அதாவது 44வது காட்சி. அதற்கு அடுத்த காட்சியாக காண்பிக்கபடுவது கதையின் முதல் காட்சி. புரியவில்லையா? கதை நடக்கும் வரிசை 1,2,3...44 என்று வைத்து கொள்ளுங்கள். படத்தில் இயக்குனர் அதை இந்த வரிசையில் காட்டி இருப்பார். 44,1,43,2....அதாவது கதையின் ஒரு பகுதி முன்னோக்கியும் இன்னொரு பகுதி பின்னோக்கியும் செல்லும்.இதுவரை நாம் பார்த்திராத விதத்தில் கதை நகர்வதால் நிச்சம் இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.

சரி இப்படி ஒரு கதையை நோலன் எப்படி பிடித்தார்?. தம்பி உடையான் படைக்கு அஞ்ச தேவையில்லை என்று சொல்வோமே. நோலனை பொறுத்த வரை படம் எடுக்கவும் அஞ்ச தேவையில்லை. இந்த படத்தின் கதை அவர் தம்பி எழுதியது. தனது உளவியல் வகுப்பில் கிடைத்த ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து அவரது தம்பி இந்த கதையை எழுதினார். அது நூலாகவும் வெளி வந்தது. அதில் சில மாற்றங்களை செய்து தன் திரைக்கதை யுக்தியால் ஒரு அசாத்தியமான வடிவமைப்பிற்கு அதை கொண்டுவந்தார் நோலன்.

கதை ரெடி. தயாரிப்பாளர் வேண்டுமே. அதுவும் அவரது இன்னொரு சொந்தத்தால் நிகழ்ந்தது. வேறு யாரும் அல்ல. அவரின் காதலி எம்மா தாமஸ். அவர் தனது காதலன் எழுதிய திரைகதையை நியூ மார்க்கெட் பிலிம்ஸ் சின் நிர்வாகியிடம் காட்ட அவர் "இது போன்ற ஒரு திரைக்கதையை எனது வாழ்நாளில் நான் படித்ததில்லை" என்று சிலாகித்து போனார். நோலன் முதலில் நாயகன் பாத்திரத்திற்கு Brad Pitt டை அணுகினார். அவருக்கு கதை பிடித்திருந்தும் கால்சீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. Brad Pitt நடித்திருந்தால் படத்தின் வெற்றி இரண்டு மடங்கு ஆகியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பிறகு Guy Pearse சை வைத்து இயக்கினார் நோலன். படம் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு அப்ளாஸ் அள்ளியது.

படத்தின் வெற்றியே ஒவ்வொருவரும் படத்தை புரிந்து கொண்ட விதம். இப்படத்தை பார்த்த யாராவது மூன்று பேரை அழைத்து கதை கேட்டீர்கள் என்றால் மூன்று விதமான புரிதல் உங்களுக்கு கிடைக்கும். இப்படத்தை பார்த்த பின் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தெரிய எனது இந்த பதிவை படிக்கவும்.

2 comments:

  1. Hats Off...
    மிக நல்ல படம்...இந்த படத்தை வைத்து ஒரு தீசிஸ் (Thesis) கூட பண்ணலாம்......இது ஒரு குழப்ப அனுபவம்....

    ReplyDelete
  2. @ராஜ்:கண்டிப்பா.. இன்றும் என்றும் சினிமா பயிலும் மாணவர்களுக்கு இந்த படம் ஆராய்ச்சி கட்டுரை தான்..

    ReplyDelete