ADD THE SLIDER CODE HERE

Pages

Wednesday, February 22, 2012

Anonymous - ஷேக்ஸ்பியர் ஒரு நயவஞ்சகன்?

புகழ் பெற்ற நாடக ஆசிரியர்களுள் முதன்மையானவர். உலகில் இதுவரை அதிகம் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் இவருடையது. காலத்தால் அழியாத எழுத்துக்களுக்கு சொந்தமானவர். இப்படி பல பில்ட் அப்கள் தகும் ஷேக்ஸ்பியருக்கு. ஆனால் இன்று எல்லோரும் கொண்டாடும் அந்த படைப்புகள் எதுவுமே ஷேக்ஸ்பியருக்கு சொந்தமானதல்ல என்கிறது Anonymous. அதுமட்டுமல்ல ஷேக்ஸ்பியர் ஒரு கிறுக்கன், குடிகாரன், கொலைகாரன் என்று காட்டியுள்ளது யாரென்றால் Independence Day முதல் 2012 படங்கள் வரை எடுத்து நமக்கெல்லாம் பரிட்சயமான Roland Emmerich தான்.


நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சர்சை இருந்து வருகிறது. முக்கியமான Conspiracy Theory களுள் இதுவும் ஒன்று. ஒரு கையுறை தயாரிப்பாளரின் மகனான ஷேக்ஸ்பியர் அடிப்படை இலக்கண வகுப்பை மட்டுமே முடித்தவர். மேலும் அவரது படைப்புகளில் வரும் நிகழ்வுகளை விவரிக்கும் அளவிற்கு அவர் உலக அனுபவம் பெற்றதில்லை என்கின்றனர் சிலர். ஒருவர் இரண்டு பேர் இல்லை. 300 க்கும் மேற்பட்டோர் இதுவரை ஷேக்ஸ்பியருக்கு எதிராக பேசிவந்துள்ளனர். நம்ம ஊர் ராமதாஸ் யாரயாவது வம்பிழுத்து பேமஸ் ஆக முயற்சிப்பது போல் அங்க யாரவது பண்ணி இருப்பாங்கனு நினைத்தேன். ஆனால் Charles Dickens, Mark Twain போன்ற மிக பிரபலமான எழுத்தாளர்களும் ஷேக்ஸ்பியரை நம்பவில்லை. பலர் தங்கள் வாழ்வையே இது உண்மை என்று நிரூபிக்க அற்பணித்துள்ளனர்.

இரண்டு நாளுக்கு முன்பு நாளிதழில் Dr.Gilbert Slater என்ற பொருளார அறிஞரை பற்றி படித்தேன். பிரிட்டனில் பிறந்து இல் இந்தியா வந்து மதராஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவரின் Seven Shakesphere என்ற நூல் பிரபலம் என்று கூறபடுகிறது. ஷேக்ஸ்பியர் பற்றிய ஆராய்ச்சியின் முடிவாக எழுதிய அந்த நூலில் இவர் கூறுவது ஷேக்ஸ்பியர் படைப்புகள் யாவும் ஏழு பேர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டது என்பதே. இவ்வாறு பல விவாதங்கள் அவருக்கு எதிராக முன்வைக்கபடுகிறது.

அப்படி என்றால் அந்த படைப்புகளுக்கு உரிமையாளர் யார்? 17ஆம் Earl of Oxford ஆன Edward de Vere என்பவர் தான் அதை உண்மையில் எழுதினார் என்கின்றனர். இவர் யார் என்பதே படத்தின் மைய கரு.

சரி கதைக்கு வருவோம். லண்டனில் பதினாறாம் நூற்றாண்டில் எலிசபெத் மகராணிக்கு பின் யார் அரியணையில் அமர்வது என்று பெரும் போட்டி நடக்கிறது. Cucil என்பவர் சூழ்ச்சி செய்து James என்பவரை இளவரசராக முயற்சிக்கிறார். ஆனால் எலிசபெத் மகன் Oxford(ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உண்மையான உரிமையாளர்) Earl Of Essex என்பவரை அரியணையில் அமர்த்த முடிவெடுக்கிறார். Cecil மற்றும் James இன் புகழை குறைத்து அரியணையில் Essex சை அமரவைக்க, தான் எழுதிய நாடகங்களை ஜான்சன் என்பவரிடம் கொடுத்து அவர் மூலம் மேடையேற்ற முயற்சிக்கிறார் Oxford. இதை ஏன் Oxford தானே செய்யவில்லை என்றால் நாடகங்கள் எழுதுவது பாவமாக கருதப்படும் நிலை அப்போது. மேலும் ஆக்ஸ்போர்ட் செய்த ஒரு கொலையை மூடி மறைக்க அவருடைய மாமனார் அவர் நாடகங்கள் எழுத கூடாது என்று ஆணையிடுகிறார். ஜான்சன் நாடகத்தை அரங்கேற்றும் நேரத்தில் ஷேக்ஸ்பியர் நுழைந்து அது தன்னுடையது என்று அறிவித்துக்கொள்கிறார். சிக்கலான முடிச்சு போல் இருக்கும் கதையில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. மீதியை படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.


Oxford அரச வம்சத்தில் வளர்வதால் அவருக்கு சிறிய வயது முதலே பல்துறை சார்ந்த அறிவு ஊட்டபடுகிறது. இளவயது முதலே அவர் கதைகள் எழுதுவதில் கைதேர்தவராக இருக்கிறார் என்று காட்டுகிறார்கள். பல நாடுகளுக்கு கப்பலில் பயணங்கள் மேற்கொள்கிறார். அதாவது Oxford தான் அந்த நாடகங்களை எல்லாம் எழுதி இருப்பார் என்பதற்கு இவை சிறிய சாட்சியங்கள். மேலும் Oxford தன் இளவயதில் ஒரு வேலைக்காரனை கொன்றுவிடுகிறார். இதே போல் ஒரு காட்சி ஷேக்ஸ்பியரின் Hamlet நாடகத்தில் வருகிறது.

படத்தில் ஷேக்ஸ்பியரை பற்றிய பிம்பத்தை இவ்வளவு கீழ்த்தனமாக காட்டவேண்டுமா என்று தோன்றுகிறது. ஒரு ஆகச்சிறந்த கவிஞரை நிரூபிக்க படாத காரணங்களை காட்டி கொலைகாரன் என்று சித்தரிப்பது எதற்கு? ஒருவேளை Davince Code போல சர்ச்சையான விசயத்தை எடுத்து படமாக்கினால் வசூல் கொட்டும் என்று இயக்குனர் நினைத்திருப்பாரோ.

படம் சொல்லிகொள்ளும்படி பிரமாதமாக இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகள் எனக்கு பிடித்திருந்தன. அதில் ஒன்று ஷேக்ஸ்பியரை மக்கள் தங்கள் கைகளில் ஏந்தி கொண்டாடும் போது நாடகத்தை எழுதிய Oxford அதே அரங்கில் அமர்ந்து அதை பார்த்து கண்ணீர் வடிப்பார். உண்மையிலேயே Oxford தான் உரிமையாளர் என்றால் அவரது மனம் எவ்வாறு கலங்கியிருக்கும் என்று காட்டியிருப்பார்கள்.

6 comments:

  1. சென்ற வருடம் வெளியான படங்களில் அதிகம் கேள்விப்படாத படமிது..2012 படம் பார்த்ததிலிருந்து இயக்குனரின் மீது கடுப்பு வந்ததும் ஒரு காரணம்..தாங்கள் சொல்வதை பார்க்கும் பொழுது படம் ஓரளவு நல்ல படம் என்றே தெரிகிறது..பார்க்க வேண்டிய லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறேன்..

    பிறகு விமர்சனம் அருமை சகோ...எழுத்துக்களே படத்தை பார்க்க ஆவலை உண்டாக்கின...தொடர்ந்து திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறேன்..நன்றிகளோடு என் வாழ்த்துக்கள்.

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  2. எனக்கு இந்த கான்ஸ்பிரண்ஸி இருக்குறதே இப்போ தான் தெரியும்.., முன்னாடியே டவுன்லோட் பண்ணிவைச்சு இருக்கேன்.., எனக்கு பிடிக்காத டைரக்டர் Roland Emerich பாக்குறது கொஞ்சம் டவுட் தான்.,

    ReplyDelete
  3. @Kumaran: நன்றி குமரன்.. படம் பெருசா பேச படல.. ஆனா பாக்கலாம்.. Costume and settings ரொம்ப அழகா இருந்தது..

    ReplyDelete
  4. @Anand: தல எனக்கும் கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்.. Fwd பண்ணியாவது பாருங்க.. கொஞ்சம் informative வா இருக்கும்..

    ReplyDelete
  5. கார்த்திக், நான் இன்னும் படம் பார்க்க வில்லை. காரணம் Roland Emerich தான். கண்டிப்பா ஒரு நல்ல படத்தை அவரால் எடுத்துர முடியாது... ரொம்ப நம்பிக்கை அவர் மேல...
    அப்புறம் மிண்டும் எழுத வந்ததுக்கு என் வாழ்த்துக்கள்..
    அடிக்கடி எழுதுங்க.
    ரொம்ப நாளைக்கு முன்னாடி உங்க ப்ளாக் வந்தேன். உங்க "Memento" analysis படிச்சேன். இப்போ மறுபடியும் வரேன்..

    ReplyDelete
    Replies
    1. thanks raj.. நீங்கலாம் கமெண்ட் போடுரதாலத்தான் எனக்கு எழுதவே புடிக்குது..மீண்டும் வாங்க..

      Delete