ADD THE SLIDER CODE HERE

Pages

Tuesday, April 3, 2012

Secrets Of Stanley Kubrick

சென்ற வாரமே எழுதி இருக்க வேண்டிய பதிவு. அதற்குள் Game of Thrones Tv series பார்க்க துவங்கி விட்டேன். அட்டகாசமான சீரீஸ். இரண்டே நாட்களில் பத்து எபிசோடுகளையும் தூக்கம் குறைத்து பார்த்தேன். நண்பர்கள் தவறாமல் இதை பார்க்கவும். இதை பற்றி நம் கருந்தேள் எழுதிய பதிவு இங்கே.

நான் சென்ற பதிவில் சொன்னது போல் குப்ரிக் பற்றிய ஒரு விஷயத்தை தான் இங்கு பார்க்க போகிறோம். நம்ம கொழந்த கணேசிடம் இதை பற்றி சொன்னதற்கு "அது எனக்கு எப்போவே தெரியுமே" என்று கூலாக கூறிவிட்டார். ஆக அவரை போன்ற Prodigy, இது பழைய மேட்டர்பா என்று என்னை திட்ட வேண்டாம்.

இதில் நான் சொல்லும் தகவல்கள் எல்லாம் சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஆவணப்படம் கூறியது. 1969ல் Apollo 11 என்ற விண்கலம் நாசாவால் நிலவிற்கு மனிதனை சுமந்து சென்றது நாம் அறிந்ததே. விண்கலம் நிலவிற்கு சென்றதே தவிர அதில் மனிதர்கள் இறங்கினர் என்பது அமெரிக்கா நடத்திய நாடகம் என்று இன்று வரை பலர் எதிர்ப்பதும் நமக்கு தெரியும். அவர்கள் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளி எல்லாமே ஜோடிகப்பட்டது என்று வாதாடுகின்றனர்.

சரி. அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுபவில்லை என்றே வைத்து கொள்வோம். அப்படியென்றால் நாசா வெளியிட்ட அந்த வீடியோ? அதில் தெரிந்த விண்வெளி? ஆர்ம்ஸ்ட்ராங் குதித்து விளையாடிய நிலவு? ஒரு செட் போட்டு தானே எடுத்திருக்க வேண்டும். அப்படி உலகையே நம்பவைக்கும் அளவிற்கு தத்ரூபமாக செயற்கை விண்வெளியை உருவாக்கி படம் பிடித்த அந்த ஜீனியஸ் யார்? ஸ்டான்லி குப்ரிக்.

ஏன் குப்ரிக்?

1959 ல் நிலவிற்கு முதல் முதலாக விண்கலம் அனுப்பி சாதனை படைத்தது சோவியத். சோவியத் உடனான பனிப்போர் காரணமாக தன் வலிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திணறிக்கொண்டிருந்தது அமெரிக்கா. அப்போதுதான் குப்ரிக்கின் Dr. Strange Love திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. அந்த படத்தின் காட்சி அமைப்பு, முக்கியமாக போர் விமானங்கள் பறக்கும் காட்சிகள் அனைத்தும் செயற்கை என்று தெரியாத அளவிற்கு இருக்கும். இந்த படம் தான் Moon Landing Video வை இயக்க குப்ரிக் தான் சரியான ஆள் என்று அமெரிக்காவை நினைக்க வைத்தது. குப்ரிச்கை அணுகி சம்மதம் பெற்றது அரசு. அதற்கான வேலைகளில் இறங்கினார் குப்ரிக். இதற்கிடையில் 2001 A space odyssey படத்தின் வேலைகளையும் துவக்கினார். நான்கு வருட உழைப்பிற்கு பிறகு Space odyssey படம் 1968 ல் வெளியானது. Moon Landing video 1969 ல் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ஒரே நபரின் கை வண்ணம் கொண்டவையாக இருக்கிறது. கீழே கொடுக்கபட்ட படங்களை பார்த்தால் புரியும்.


கோட்டிற்கு முன்னால் இருபது வரை செட். கோட்டிற்கு பின்னால் இருப்பது விண்வெளி போல் தெரியும் திரை. இதை எப்படி எடுத்தார்கள் என்றால்.



இது Space Odyssey படத்தின் முதல் காட்சியில் வரும் ஆப்ரிக்க கண்டம் என்றால் நம்ப முடிகிறதா.


இப்போது நாசா வெளியிட்ட புகைப்படங்களை பாப்போம்.



இந்த புகைப்படங்களை பார்த்தால் ஒரே மாதிரியான் செட் போட்டு இருப்பதை காண முடியும். மேலும் நாசாவின் விஞ்ஞானிகளான Frederick Ordway மற்றும் Harry Lange, Space Odyssey படத்திற்கு ஆலோசகர்களாக பணிபுரிந்துள்ளனர். இது குப்ரிக் பற்றிய இந்த சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்துவதாக உள்ளது.

குப்ரிக் சொல்லாமல் சொல்லிய ரகசியம்:

1980ல் வெளியான தனது The Shining படத்தின் மூலம் நிலவில் மனிதன் தரை இறங்க வில்லை என்கிற உண்மையை குப்ரிக் மறைமுக மாக கூறியிருக்கிறார். இது The Shining படத்தில் வரும் ஒரு காட்சி.


இதில் அந்த சிறுவனின் சட்டையை கவனியுங்கள். Apollo 11 என்று எழுதி இருக்கிறது. படம் பார்த்தவர்களுக்கு இந்த காட்சி தெரியும். அந்த சிறுவன் நடந்து சென்று ஒரு அறைக்குள் நுழைவான். அந்த அறையில் உள்ளது எதுவும் உண்மை இல்லை, எல்லாம் ஒரு பொய்யான தோற்றம் என்று காட்சி விரியும். சிறுவன் நுழையும் அந்த அறையின் எண் 237. இந்த படம் ஒரு நாவலின் தழுவல். அந்த நாவலில் அறையின் எண் 218 என்று இருக்கும். இதை குப்ரிக் ஏன் 237 என்று மாற்ற வேண்டும்.


அந்த அறைதான் நிலவு என்றும், நிலவிற்கும் பூமிக்கும் இருக்கும் இடைவெளி 237000 மைல்கள் என்பதை குறிகின்றாரா. அதாவது சிறுவன் என்கிற அபோல்லோ விண்கலம், அறை என்கிற இல்லாத நிலவிற்குள் நுழைந்தது என்கிறார். இவையெல்லாம் குப்ரிக் கவனிக்காமல் நடந்த சம்பவமாக நம்மால் எடுத்து கொள்ள முடியாது. ஒரு காட்சியில், கதாபாத்திரம் என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை இயக்குனர் தான் முடிவு செய்வார். அதுவும் குப்ரிக் படங்களில் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு உள் அர்த்தம் இருக்கும். எனவே இந்த காட்சி ஒரு உண்மையை வெளிபடுத்தும் பொருட்டே அவர் இப்படி செய்திருக்கிறார். கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். Moon Landing வீடியோவை இயக்கியவர் Kubrick என்ற குற்றச்சாட்டு இந்த படத்தை இயக்கும் முன்பே அவர் மேல் இருந்தது. இருந்தும் இப்படி ஒரு Controversial காட்சியை அவர் வைக்க காரணம்?

இவை தான் நான் பார்த்த Kubrick's Odyssey - Secrets Hidden in the Films of Stanley Kubrick என்ற ஆவன படத்தில் கூறியது. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் இந்த படத்தை பார்க்கவும். இதை எல்லாம் உண்மை என்றோ பொய் என்றோ நான் கூற விரும்பவில்லை. இப்படி ஒரு தகவல் இருக்கிறதென்று எனக்கும் போன மாதம் வரை தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த பதிவு. மேலும் அமெரிக்காவிற்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை நம்பவே என் மனம் விளைகிறது. ஏனெனில் இன்று மதியம் நான் படித்து முடித்த Marlon Brando சுயசரிதம் வரை பல புத்தகங்களில் அமெரிக்கர்களே அமெரிக்கா இதுவரை நடத்திய கொடுமைகளை விளக்கி கூறி உள்ளனர். அதனால் தான் இந்த நிலைப்பாடு. நண்பர்கள் இதன் தொடர்பாக உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

14 comments:

  1. குப்ரிக்கின் ஐந்தாறு படங்களை பார்த்தாகிவிட்டது நண்பரே,,ஆனால், தாங்கள் சொல்லும் தகவல் மிக புதிது..சீக்கிரம் டோக்குமெண்டரியை பார்த்துவிடுகிறேன்..தங்களது எழுத்துக்கள் பதிவை சுவாரஸ்யமாகவும் வாசிக்க ஏகுவாகவும் சுவையாகவும் ஆக்குகிறது..நன்றி.

    ReplyDelete
  2. ஏற்கனவே உண்மையா பொய்யான்னு தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். இப்ப நீங்க சொன்ன தகவல் எல்லாமே எனக்குப் புதுசு. தேடிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. குப்ரிக் பற்றிய தகவல்...நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    ‘புஃல் மெட்டல் ஜாக்கெட்’படத்தில் அமெரிக்காவை காய்ச்சி எடுத்திருப்பார்.
    அவரா இப்படி?

    ReplyDelete
  4. @ஹாலிவுட்ரசிகன்: படம் பார்த்தால் குழம்ப நிறைய தகவல்கள் தருவார்கள்.. அவ்வளவு ஏன்.. குப்ரிக் கொலை செய்ய பட்டாரா என்பது வரை செல்கிறது..

    ReplyDelete
  5. @Kumaran: நன்றி குமரன். படத்தில் நிறைய வருகிறது. நான் இங்கே கூறியது சில பகுதிகள் தான்.

    @உலக சினிமா ரசிகன்: உண்மைதான். அவர் பின்னாளில் அமெரிக்காவின் அச்சுறுத்தலில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள். இந்த படத்தில் மட்டும் அல்ல. வேறு சில பதிவுகளிலும் படித்தேன்.

    ReplyDelete
  6. நிறைய புது தகவல்கள் ! அமெரிக்க நிலவில் கால் வைத்தது நாடகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
    ஆனால் அதை இயக்கியவர் குப்ரிக் என்பது புது தகவல்.
    சுவரிசியமான பதிவு !
    " Kubrick's Odyssey - Secrets Hidden in the Films of Stanley Kubrick" டாகுமெண்டரி படத்தை கண்டிப்பாய் பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. அத்தனை தகவலும் எனக்கு புதுசு நண்பா! இந்த டாகுமெண்டரியை பார்க்காமல் விடப் போவதில்லை..

    ReplyDelete
  8. அமெரிக்கப் படங்கள், சில புத்தகங்கள், சில இடங்கள், சில பாடல்கள், சில மனிதர்கள் தவிர, அந்த நாட்டை நான் எப்போதுமே சிலாகித்ததில்லை. குப்ரிக் அப்படி ஒரு படத்தை எடுத்திருப்பாராகில், கட்டாயம் அவரது திறமையைப் பாராட்டுவேன் :-). குப்ரிக் - மிகச்சிறந்த ஒரு படைப்பாளி. என்ன ஆனாலும் அவர் மேல் எனக்கு இருக்கும் மரியாதை மாறாது :-)

    ReplyDelete
  9. நல்ல பதிவு சார் .ஒரு சந்தேகம் .நிலவுக்கு சென்ற எல்லா மிஷனுமே டுபாகூரா ? இல்லை அந்த முதல் மிஷன் மட்டும் பொய்யா ?

    ReplyDelete
    Replies
    1. பொய்யாகத்தான் இருக்கும்.. ஏனெனில் அமெரிக்காவை தவிர வேறு யாரும் நிலவிற்கு இன்னும் மனிதனை அனுப்பவில்லை.. அட அமெரிக்காவே 1972க்கு பிறகு மனிதனை அனுபவில்லை.. இவ்வளவு தொழில் நுட்ப வளர்சிக்கு பிறகும் அதை போல் ஒரு நிகழ்வை நடத்த ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லை என தோன்றுகிறது..

      Delete
  10. புதுசு புதுசா தகவல்கள் சொல்லுறிங்க.., கண்டிப்பா இந்த டாகுமெண்ட்ரியை பாக்கணும்.., Game of Thrones வாங்கும் போது இதையும் சேர்த்து வாங்கிக்கிறேன்..,

    ReplyDelete
  11. Wonderful post about the genius "Kubrick.' Awesome details and great writing. If u are interested, read my post about Kubrick:

    http://movieretrospect.blogspot.com/2012/04/stanley-kubrick-and-darkness-of-modern.html

    P.S. I liked 'Game of Thrones' too. Captivating TV series.

    ReplyDelete
  12. மூன தொட்டது யாரு...?

    ReplyDelete